மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 148 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.பின்னர் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சியை சேர்ந்த கவுதமி என்பவர் ஆற்றில் மண்சரிந்து விழுந்து உயிரிழந்தற்காக அவரது தாயார் விஜயலெட்சுமிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அடையாள அட்டையினையும், 4 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.