மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
குறைதீர்க்கும் கூட்டம்
தமிழக முதல் - அமைச்சர் உத்தரவின் பேரில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதத்தில் 2-வது மற்றும் 4-வது புதன்கிழமைகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் இருந்து 25 மனுக்கள் பெறப்பட்டு அதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மாரி ராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (பயிற்சி) பாலாஜி, இலக்கியா, ஜெகநாதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமிஷனர் அலுவலகம்
இதேபோல் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் சீனிவாசன் (கிழக்கு), சரவணகுமார் (மேற்கு) மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மதியம் 1 மணி வரை நடந்த இந்த கூட்டத்தில் பெறப்பட்ட 19 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.