உப்பள தொழிலாளர்களிடம் குறைகேட்கும் கூட்டம்


உப்பள தொழிலாளர்களிடம் குறைகேட்கும் கூட்டம்
x

மனித உரிமை ஆணையம் சார்பில் உப்பள தொழிலாளர்களிடம் குறைகேட்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

கரியாப்பட்டினம்:

வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உப்பளத் தொழிலாளர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் உப்பள தொழிலாளர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு உப்பளத்தில் உணவு உண்ண கூடம், ஓய்வு எடுப்பதற்கு நிழற்குடையும், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை விடுத்தனர். இதில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். உப்பளத் தொழிலாளர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி உறுதியளித்தார்.


Next Story