வத்தலக்குண்டுவில் வெற்றிலையை தாக்கும் சுருட்டை நோய்
வத்தலக்குண்டுவில் வெற்றிலையை தாக்கும் சுருட்டை நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை சாகுபடி அமோகமாக நடந்தது. அப்போது ஒரு வகை வினோத நோயால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். அதன்பின்னர் வெற்றிலை சாகுபடி செய்ய யாரும் முன்வரவில்லை.
தற்போது பழைய வத்தலக்குண்டுவில் சில விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். தற்போது அந்த பகுதியில் வெற்றிலையை போண்டா சுருட்டி என்ற நோய் தாக்கி வருகிறது. வெற்றிலை விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பழைய வத்தலக்குண்டு பகுதியில் தோட்டக்கலைத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு நோய் தாக்குதலை தடுக்க தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று வெற்றிலை சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story