கருப்பூர் அருகே பால் பண்ணை அலுவலர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
கருப்பூர் அருகே பால் பண்ணை அலுவலர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
கருப்பூர்:
பால் பண்ணை அலுவலர்
சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி, காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 53). இவர் சேலம் பால் பண்ணையில் முதுநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கருப்பூர், ரெயில் நிலையம் அருகில் முனியாண்டி தண்டவாளத்தில் உடல் சிதறி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்,
ரெயில் முன் பாய்ந்து...
பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக முனியாண்டி ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story