`குற்றாலம் மலை மீது அணை கட்ட வேண்டும்'


`குற்றாலம் மலை மீது அணை கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் மலை மீது அணை கட்ட வேண்டும், என்று வனத்துறை அமைச்சரிடம் தி.மு.க. மாவட்ட செயலாளர் கோரிக்கை மனு கொடுத்தார்

தென்காசி

குற்றாலம் மலை மீது அணை கட்ட வேண்டும், என்று வனத்துறை அமைச்சரிடம் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு கொடுத்தார்.

அமைச்சரிடம் மனு

சென்னையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. சீசன் சமயத்தில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள மக்கள் வருகை வந்து குளித்து மகிழ்கிறார்கள். அருவிகளில், மழை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வெள்ளமே வந்தாலும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தண்ணீர் படிப்படியாக குறைந்து ஒரு வாரத்திற்குள் நூலிழையைப் போல விழும் துர்ப்பாக்கியமான நிலைமையை சமீப காலமாக காண முடிகிறது. இதற்கு காரணம் குற்றாலம் மலைப்பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதி மிகவும் குறைந்து விட்டது.

அணை கட்ட வேண்டும்

ஏழை எளியவர்களும், நடுத்தர மக்களும் பெரும்பாலும் வந்து மகிழ்ந்து செல்லும் குற்றாலத்தில் தண்ணீர் நிரந்தரமாக விழும்படி செய்ய குற்றால மலை மீது ஒரு சிறிய அணைக்கட்டு ஒன்றை மெயின் அருவிக்கு மேல் 3 கி.மீ. தொலைவில் கட்ட வேண்டும்.

மேலும் இயற்கையாக மூன்று புறங்களிலும் அரண்கள் போல மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் இந்த அணைக்கட்டு கட்ட ஆகும் திட்ட செலவு மிக குறைவாகத்தான் இருக்கும். எனவே இந்த அணையை கட்டுவதற்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனிடமும் இந்த கோரிக்கை குறித்து மனு கொடுத்துள்ளார்.

அரசு கலைக்கல்லூரி

மேலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுத்துள்ள மனுவில், கடையத்தில் அரசு கலைக்கல்லூரி பணியை விரைந்து தொடங்க வேண்டும். ஆழ்வார்குறிச்சி கோவில் பணிக்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடங்கிட வேண்டும். கீழப்பாவூர் சிவன் கோவில் புனரமைப்பு பணியை விரைவு படுத்திட வேண்டும். குற்றாலம் சித்திர சபை புனரமைப்பு பணியை தொடங்கிட வேண்டும். வீரகேரளம்புதூர் ஆஸ்பத்திரியை இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் அமைப்பதற்கும் திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி படிக்கிறார்கள். அதற்காக அரசு அறநிலையத்துறை இடத்தை ஒதுக்கி தர வேண்டும், என வலியுறுத்தியும் மனு கொடுத்தார்.



Next Story