மேலப்பிடாகையில் சாலையின் நடுவே அபாய பள்ளம்
வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகையில் சாலையின் நடுவே உள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகையில் சாலையின் நடுவே உள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை
சென்னையில் இருந்து புதுச்சேரி, காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி வழியாக கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
நாகூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகள் முக்கிய ஆன்மிக தலமாக விளங்குவதால் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த வழியாக வாகனங்களில் வந்து செல்கின்றனர்.மேலும் வெளிமாநிலமான கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.
அபாய பள்ளம்
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மேலப்பிடாகை கடை தெருவில் அபாய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.