ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்


ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
x

ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்-திருப்பதி நெடுஞ்சாலையில் நாகாலம்மன் நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையின் ஓரத்தில் ஒரு மின் கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து பல முறை மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியமாகவே உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story