இறந்த நண்பர் கனவில் வந்து கூப்பிடுவதாக கூறி மதுவில் விஷம் கலந்து குடித்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை


இறந்த நண்பர் கனவில் வந்து கூப்பிடுவதாக கூறி  மதுவில் விஷம் கலந்து குடித்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை
x

இறந்த நண்பர் கனவில் வந்து கூப்பிடுவதாக கூறி மதுவில் விஷம் கலந்து குடித்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 41). இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருடைய நண்பர் ரவிக்குமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய நண்பர் ரவிக்குமார் கனவில் வந்து கூப்பிடுவதாக கோவிந்தராசு அடிக்கடி கூறி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கவுந்தப்பாடியை அடுத்த பெ.மேட்டுப்பாளையம் வெங்கமேடு மணியக்காரர் தோட்டம் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு கோவிந்தராசு மயங்கி நிலையில் கிடந்தாக கூறப்படுகிறது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோவிந்தராசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story