மர்மமான முறையில் இறந்து கிடந்த மான்
மான் மர்மமான முறையில் இறந்தது
திருச்சி
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம், சிறுகனூர் ஆகிய இடங்களில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு குரங்கு, மான், மயில் உள்ளிட்டவைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது, கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதியில் நீர்நிலைகள் வறண்டுவிட்டன. இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில், நேற்று சிறுகனூரில் இருந்து தச்சங்குறிச்சி- லால்குடி செல்லும் சாலையில் ஆண் மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத்துறை அதிகாரிகள் மற்றும் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அந்த மான் எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story