கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
x

திருவண்ணாமலையில் கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா காடகமான் கிராமத்தில் காப்பு காட்டில் இருந்து வெளியே வந்த மான் ஒன்று அந்த பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் வேட்டவலம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அந்த மானை வனத்துறையினர் கண்ணமடை காப்புகாட்டுக்குள் விட்டனர்.

கிணற்றில் விழுந்த மானை மீட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story