சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய ஏலகிரி மலை
வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் இன்றி ஏலகிரிமலை வெறிச்சோடியது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாத் தலமாக திகழும் ஏலகிரிமலைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலை பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் சுற்றுலை பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்கள் இங்குள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்தும் செல்வார்கள்.
இந்த நிலையில் வார விடுமுறையான நேற்று முன்தினமும், நேற்றும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
இதனால் படகு சவாரி இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story