தொழிலாளிக்கு தர்ம அடி


தொழிலாளிக்கு தர்ம அடி
x

பழனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள ராசாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அலறினார். அந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது முருகேசன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து முருகேசன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர், பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story