ெரயிலில் அடிபட்டு மாற்றுத்திறனாளி பலி
பாணாவரம் ெரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயிலில் அடிபட்டு மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை
நெமிலி
பாணாவரத்தை அடுத்த நெறிஞ்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 55) மாற்று திறனாளி.
இவர் பெங்களூரு செல்வதற்காக பாணாவரம் ரெயில் நிலையம் வந்தார்.
ரெயில் வந்து நிற்கும் பிளாட்பாரத்துக்கு நடைமேடையில் ஏறிச்செல்ல முடியாததால் அவர் கீழே இறங்கி தண்டவாளத்தை கடந்தார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த சரக்கு ெரயிலில் அடிபட்ட அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் அங்கு சென்று குப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த குப்பனுக்கு கண்ணகி என்கின்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story