காதலியின் தாய் திட்டியதால், மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை: இறந்தும் முகத்தை கூட பார்க்க வராத காதலி...!


காதலியின் தாய் திட்டியதால், மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை: இறந்தும் முகத்தை கூட பார்க்க வராத காதலி...!
x

நீ சந்தோசமா இரு" என தற்கொலைக்கு முன் காதலன், தனது காதலிக்கு அனுப்பி வைத்த உருக்கமான மெசேஜ் இதுதான்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, காதலியின் தாய் திட்டியதால், மனமுடைந்த காதலன், வாட்ஸ் அப்பில் காதலிக்கு உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

"நான் பிறந்து இருக்கவே கூடாது டா - நானே செத்து போய்டறேன் மா - நீ சந்தோசமா இரு" என தற்கொலைக்கு முன் காதலன், தனது காதலிக்கு அனுப்பி வைத்த உருக்கமான மெசேஜ் இதுதான்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாது என்பவரது மகன் சசிகுமார்... கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் செல்போன் விற்பனை கடையில் பணிபுரிந்து வந்த சசிகுமார், அதே கடையில் பணிபுரிந்த ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனாலும், மகனின் காதல் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த சசிகுமாரின் பெற்றோர், பெண் வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த காதல் ஜோடிக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், வீட்டில் சசிகுமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கதறி அழுது துடித்துள்ளனர்.


Next Story