தூத்துக்குடியில், வருகிற 7-ந் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி


தூத்துக்குடியில், வருகிற 7-ந் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், வருகிற 7-ந் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி.ஜான்வசீகரன், செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி வருகிற 7, 8-ந் தேதிகளில் தூத்துக்குடி ஜிம்கானா கிளப் விளையாட்டு அரங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

போட்டிகள் அனைத்தும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் போட்டி விதிமுறைகள்படி நடக்கும். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 2 அணிகள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மண்டல போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 2 அணிகள் மாநில போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் போட்டிக்கான நுழைவு படிவங்களை தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ள மாவட்ட கைப்பந்து கழக அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் பெற்றுக் கொண்டு வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து கொடுத்து பதிவு செய்து, அணியின் வருகையை உறுதி செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு போட்டி பொறுப்பாளர்கள் ஜெயபால் 94420 55355, ஜூடு ரஞ்சித் 94438 71330 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story