60 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
இலுப்பூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது.
இலுப்பூர் அருகே உள்ள திருவன்னாகோவில் பட்டியை சேர்ந்தவர் பத்மா. இவர் வளர்த்து வந்த நாய் ஒன்று அதே பகுதியில் உள்ள முருகேசன் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி நாயை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire