6 மாதங்களாக தூர்வாரப்படாத சாக்கடை நோய் பரவும் அபாயம்


6 மாதங்களாக தூர்வாரப்படாத சாக்கடை நோய் பரவும் அபாயம்
x

ஈரோட்டில் 6 மாதங்களாக சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஈரோடு

ஈரோட்டில் 6 மாதங்களாக சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நோய் பரவும் அபாயம்

ஈரோடு நேதாஜிரோடு மரப்பாலம் நால்ரோடு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடை கடந்த 6 மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் மதுக்கடை செயல்பட்டு வருவதால், மது பிரியர்கள் சாலையோரமாக அமர்ந்து மது குடிக்கின்றனர். பிறகு காலி மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளரையும் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர்.

இதனால் சாக்கடையில் மது பாட்டில்களும், பிளாஸ்டிக் பொருட்களும் குவிந்து கிடக்கின்றன. சாக்கடையும் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- ஈரோடு நேதாஜிரோடு பகுதியில் ஆஸ்பத்திரிகள், திருமண மண்டபம், வணிக நிறுவனங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இந்தநிலையில் மது பிரியர்கள் சாலையில் காலி மதுபாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. 6 மாதங்களாகியும் சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடையோரம் புல், புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story