திருவேங்கடம் பஸ்நிலையத்தில் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
திருவேங்கடம் பஸ்நிலையத்தில் குடிநீர் தொட்டி பொதுமக்களுக்கு பயன்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் காமராஜர் பஸ்நிலையம் உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் அதிகம் வராத காரணத்தால் கடைகளும் இல்லை. கிராமத்துக்கு செல்லும் மினி பஸ்கள் மட்டும் பஸ்நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் கிராம பகுதியை சேர்ந்த பயணிகள் குடிநீர் வசதிக்காக பயணிகள் அறை அருகே சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அதில் குடிநீர் ஊற்றி பயணிகள் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாத காரணத்தால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஜாருக்கு வந்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிறுவர், சிறுமிகளும் குடிநீர் கேட்டு பெற்றோரை கெஞ்சுவது வேதனையாக உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியில் தினசரி குடிநீர் நிரப்ப வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.