வத்தலக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


வத்தலக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
x

வத்தலக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

திண்டுக்கல்

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே உள்ள தோப்புப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 44). ஆட்டோ டிரைவர். இன்று இவர், ஆட்டோ சவாரிக்காக திண்டுக்கல்லுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து செம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக தோப்புப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலகுண்டு பிரிவு பகுதியில் அவர் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி கருப்பையா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கருப்பையா உயிரிழந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story