கடலில் பிணமாக கிடந்த மேளக்கலைஞர்


கடலில் பிணமாக கிடந்த மேளக்கலைஞர்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:30 AM IST (Updated: 4 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கடலில் மேளக்கலைஞர் பிணமாக கிடந்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவை சேர்ந்த கணேசன் மகன் அந்தோணி ஆறுமுகம் (வயது 48). மேளக்கலைஞரான இவர் நேற்று அதிகாலை திருச்செந்தூர் கோவிலில் பால்குடத்திற்கு மேளம் வாசிக்க செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார்.

காலை 6 மணியளவில் தியானம் மண்டபம் பின்புறம் உள்ள கடல் பகுதியில் அந்தோணி ஆறுமுகம் கடலில் பிணமாக மிதந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அவரது மகன் சுமன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் வழக்குப்பதிவு செய்து அந்தோணி ஆறுமுகம் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.


Next Story