பந்தலூர் அருகே போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சிக்கினார்
பந்தலூர் அருகே போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பந்தலூர்
பந்தலூர் அருகே போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
போலீசில் புகார்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுபைர் (வயது 48). இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான மக்கள் பாதை அமைப்பின் நிர்வாகி என்றும், லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர், இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றபுலனாய்வு அமைப்பின் மாவட்ட செயலாளர், ஐ.பி.எஸ். மற்றும் சி.ஐ.டி மாவட்ட செயலாளர் என்றும் கூறிவந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த அமைப்புகளின் பெயர்களில் ஆவணங்கள் மற்றும் சீல் கட்டைகள் தயாரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலி ஆவணங்கள் தயாரித்து ஒருசிலரின் பெயரில் புகார் மனுவை சேரம்பாடி போலீசில் கொடுத்து உள்ளார்.
கைது
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சுபைரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு போலி ஆவணங்கள் தயாரித்து பணம் பெற்று மோசடி செய்ததும், போலி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டராக இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ் மற்றும் போலீசார் சுபைரின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அவரின் வீட்டில் இருந்து பல்வேறு போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் சுபைர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபைரை கைது செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-----------------