10-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது
சேலம்
பெத்தநாயக்கன்பாளையம்:-
பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை மலைப்பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து விட்டு மேல் வீதி பகுதியில் தங்கவேல் (வயது 63) என்பவர் ஆங்கில மருத்துவம் படித்ததாக கூறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருமந்துறை அரசு தலைமை டாக்டர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்ததும், அவர் கருமந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் தங்கவேல் போலி டாக்டர் என்பது உறுதியானதை அடுத்து அவரை கைது செய்தனர்.
Next Story