நன்னடத்தை விதிகளை மீறிய பிரபல ரவுடி மீண்டும் சிறையில் அடைப்புமீண்டும் சிறையில் அடைப்பு


நன்னடத்தை விதிகளை மீறிய  பிரபல ரவுடி மீண்டும் சிறையில் அடைப்புமீண்டும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் நன்னடத்தை விதிகளை மீறிய பிரபல ரவுடி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் நியூ டெம்பிள் அட்கோ பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது48). இவர் திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல், கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது. பிரபல ரவுடியான இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டி ஓசூர் உதவி கலெக்டரால் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு வந்துள்ளது. இவர் தற்போது நன்னடத்தை ஓராண்டு பிணையம் பெற்று இருந்தார்.

இந்தநிலையில் இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், நன்னடத்தை விதிகளை மீறிய ராதாகிருஷ்ணனை உதவி கலெக்டர் சரண்யா முன்னிலையில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து நன்னடத்தை விதியை மீறிய ராதாகிருஷ்ணனுக்கு நிலுவையில் உள்ள 6 மாதம் சிறையில் இருக்கும்படி உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ராதாகிருஷ்ணனை மீண்டும் தர்மபுரி சிறையில் அடைத்தனர்.


Next Story