கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றார்
விருதுநகர்
விருதுநகர்
சிவகாசி தாலுகா பெரிய வாடியூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, விவசாயம் செய்வதை தடுப்பதாகவும் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு மாரிமுத்து தனது மனைவி, மகள்கள் மற்றும் மகனுடன் மனு அளிக்க வந்தார். இந்நிலையில் திடீரென மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புபணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story