மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதி விவசாயி பலி
சேதுபாவாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதி விபத்தில் விவசாயி பலியானார். மேலும் அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதி விபத்தில் விவசாயி பலியானார். மேலும் அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
விவசாயி
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே முதுகாட்டை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது65).விவசாயி. இவருடைய மனைவி செல்வி (60). இந்த நிலையில் அடைக்கலம் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் தனது மனைவி செல்வியை ஏற்றி கொண்டு உறவினர் வீட்டு விழாவிற்கு மணமேல்குடிக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
லோடு வேன் மோதியது
அப்போது வல்லவன்பட்டினம் அருகே வந்த போது எதிரே நாகையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி மீன்கள் ஏற்றி சென்ற லோடு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அடைக்கலம் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அடைக்கலம் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம்
காயமடைந்த செல்வி மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.