வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உழவர் சந்தை அமைக்கப்படும்


வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உழவர் சந்தை அமைக்கப்படும்
x

கோத்தகிரியில் வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

உழவர் சந்தை

கோத்தகிரி கடைவீதி பகுதியில் மார்க்கெட்டை ஒட்டி உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் 50 கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மாற்று இடத்தில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் நேற்று கோத்தகிரியில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உழவர் சந்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் காயத்ரி, செயல் அலுவலர் மணிகண்டன், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிலத்திற்கான வரைபடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வியாபாரிகள் மனு

அப்போது அமைச்சரிடம், கடை இழந்து பாதிப்புக்குள்ளாகும் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பாதிப்பில்லாத வகையில், வேறுபகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் எனத் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோத்தகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர், வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என உறுதியளித்தார். ஆய்வின் போது கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத் தலைவர் உமாநாத் போஜன், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதேபோல் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.


Next Story