குடும்பத்தகராறில் குழந்தையை தூக்கிச் சென்ற தந்தை கடத்தியதாக தாய் போலீசில் புகார்


குடும்பத்தகராறில் குழந்தையை தூக்கிச் சென்ற தந்தை கடத்தியதாக தாய் போலீசில் புகார்
x
வேலூர்

வேலூர் தொரப்பாடியை சேர்ந்தவர் பிரியா (வயது 32). இவருக்கும் சென்னையை சேர்ந்த ரவி என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் வீட்டில் இருந்த குழந்தையை ரவி தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியா பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதில், குழந்தையை ரவி கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story