பள்ளிக்கு சென்றபோது காரை வழிமறித்து 3 வயது சிறுவனை கடத்திய தந்தை
தக்கலை அருேக பள்ளி குழந்தைகள் சென்ற காரை வழிமறித்து 3 வயது சிறுவனை தந்தையே கடத்தி சென்றார். சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசர் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தக்கலை:
தக்கலை அருேக பள்ளி குழந்தைகள் சென்ற காரை வழிமறித்து 3 வயது சிறுவனை தந்தையே கடத்தி சென்றார். சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசர் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பள்ளி குழந்தைகள் சென்ற கார்
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கடமலைக்குன்று பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பகுதிகளில் இருந்து பல மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்கள் தனியார் வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று பிலாங்காலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள் ஒரு சொகுசு காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த கார் கடமலைக்குன்று அருகே சென்று கொண்டிருந்த போது 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக பின்தொடர்ந்து வந்தன. இதனால் டிரைவர் சுரேஷ் காரை ஓரமாக ஒதுக்கி பின்னால் வந்த வாகனங்களுக்கு வழி விட்டார். பின்னால் வந்த கார்களும், மோட்டார் சைக்கிளும் முந்திச் சென்று பள்ளி குழந்தைகள் இருந்த அந்த காரை வழிமறித்து நிறுத்தினர். இதற்கிடையே கார்களில் இருந்து திபு... திபு...வென ஒரு கும்பல் இறங்கி வந்தது.
அந்த கும்பல் பள்ளி குழந்தைகள் இருந்த கார் கதவை திறந்து யாரையோ அங்கும் இங்குமாக தேடினர். ெதாடர்ந்து காரில் இருந்த 3 வயதுடைய ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக தூக்கினர்.
இரும்பு கம்பியை காட்டி மிரட்டல்
இதைப்பார்த்த கார் டிரைவர் சுரேஷ் அவர்களை தடுக்க முயன்றார். உடனே அந்த கும்பலில் இருந்த சிலர் அவரிடம் இரும்பு கம்பியை காட்டி மிரட்டினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பிற குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்ற பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர். உடனே அந்த கும்பல் அந்த சிறுவனை தூக்கிக்கொண்டு காரில் ஏறி தப்பி சென்றது.
இந்த சம்பவம் சினிமாவில் வருவதுபோல் சில வினாடிகளில் நடந்து முடிந்தது. இந்த சம்பவம் குறித்து டிைரவர் சுரேஷ் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த விசாரணை நடத்தினர்.
அப்போது, கடத்தப்பட்ட சிறுவன் பிலாங்காலை பகுதியை சேர்ந்த ஜெயப்பிரியா (வயது27) என்பவரது மகன் ஆத்விக் பிரியன் (3) என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயப்பிரியாவை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியது ெதரிய வந்தது.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
குடும்ப தகராறு
ஜெயப்பிரியாவுக்கும் அம்மாண்டிவிளையை சேர்ந்த கார்டிரைவரான பிபின் பிரியன் (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகன் ஆத்விக் பிரியன். ஜெயப்பிரியா மணவாளாக்குறிச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜெயப்பிரியா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் பிலாங்காலையில் உள்ள தந்தை சுந்தர் ராஜ் வீட்டுக்கு வந்தார்.
அவர் தந்தை வீட்டில் வசித்து வரும் நிலையில் தனது மகன் ஆத்விக் பிரியனை கடமலைக்குன்று தனியார் பள்ளியில் பிரீ.கே.ஜி. வகுப்பில் சேர்த்தார். சிறுவன் தினமும் பள்ளிக்கு காரில் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு காரில் செல்லும் வழியில்தான் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியது.
கணவர் மீது புகார்
இதுகுறித்து ஜெயப்பிரியா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 'தனது கணவர் பிபின் பிரியன் மற்றும் அவரது உறவினர்கள்தான் குழந்தையை கடத்தி இருக்க வேண்டும்' எனக்கூறியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் பிபின் பிரியனின் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர் ஈத்தாமொழி பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று மதியம் 2 மணியளவில் போலீசார், ஜெயப்பிரியாவுடன் ஈத்தாமொழி பகுதிக்கு சென்று பிபின் பிரியனின் நண்பர் வீட்டில் அடைத்து வைத்திருந்த சிறுவன் ஆத்விக் பிரியனை மீட்டனர். இதற்கிடைேய போலீசார் வருவதை அறிந்ததும் பிபின் பிரியன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து சிறுவனை கடத்தியதாக ஜெயப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் பிபின் பிரியன், அவரது தாயார் பூமதி, சகோதரி கமலா பிரித்தி, நண்பர் அஜித் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பள்ளி குழந்தைகள் சென்ற காரை வழிமறித்து கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் 5 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குளியல் அறையில் அடைக்கப்பட்ட சிறுவன்
சிறுவனை கடத்திய பிபின் பிரியன் ஈத்தாமொழி பகுதியில் இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் சிறுவனை ேதடி சென்றனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு சிறுவனை கடத்தி சென்ற கார் நிற்பதை கண்டனர். இதனால் பிபின் பிரியனும், சிறுவனும் அங்கு இருக்கலாம் என கருதிய போலீசார் வீட்டை நெருங்கி சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்த பிபின் பிரியன் உடனே தப்பி சென்றார். ேபாலீசார் அந்த வீட்டுக்குள் சென்ற போது பிபின் பிரியனின் தாயும், சகோதரியும் இருந்தனர். ஆனால் சிறுவன் ஆத்விக் பிரியனை காணவில்லை. இதனால், போலீசார் வீட்டில் ஒவ்வொரு அறையாக தேடினர். அப்போது வீட்டில் இருந்த குளியல் அறை வெளிப்புறமாக பூட்டு போட்டு பூடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே ெசன்ற போது சிறுவனை அங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் சிறுவனை வீட்டில் இருந்தவர்கள் குளியல் அறையில் அடைத்து வைத்தது ெதரிய வந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.