ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சில வங்கிகளில்2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள தனி கவுண்ட்டர்


ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சில வங்கிகளில்2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள தனி கவுண்ட்டர்
x

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சில வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சில வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

தனிக்கவுண்ட்டர்

பாரத ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பின்னர் 2000 ரூபாய் ஆயிரம் நோட்டு செல்லாது என்றும் கடந்த 19-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை 23-ந்தேதி (நேற்று) முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும், ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்றும், நாட்டில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் பாரத ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கி கிளைகளில் பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். கூட்டம் அதிகமாக இருந்த ஒரு சில வங்கிகளில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆதார் கார்டு அவசியம்

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50 ஆயிரத்துக்குள் செலுத்த எந்தவித ஆவணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலுத்தியவர்கள் தங்களது பான் கார்டை காண்பித்து பணம் செலுத்தலாம்.

ஒருவர் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் செலுத்தலாம் என்பது நடைமுறையில் உள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாய் நோட்டாக இருந்தாலும் சரி அல்லது வேறு ரூபாய் நோட்டாக இருந்தாலும் சரி எந்தவித தடையும் இன்றி செலுத்தலாம். 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற வரும் பொதுமக்கள் ஆதார் கார்டு அல்லது பேன் கார்டை கொண்டுவரவேண்டும்' என்றார்.

கூட்டுறவு வங்கி

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 33 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில், கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் செலுத்த நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 33 மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கியில், வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது கணக்கில் 2,000 ரூபாய் செலுத்த அனுமதித்துள்ளோம். தங்களது கணக்கில் செலுத்துவோர், பான் கார்டு நகல் வழங்க வேண்டியதில்லை. அதேநேரம், ஓரிரு 2,000 ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் கூட்டுறவு வங்கிக்கு வந்து பணத்தை மாற்றி 500 ரூபாயாக வழங்க கேட்கின்றனர். அவ்வாறு வருவோரிடம், பான் கார்டு நகல் பெற்று வழங்குகிறோம்.

எங்களுக்கும், வங்கி தலைமையில் இருந்து பான் கார்டு வாங்க வேண்டாம் என்று எந்தவித உத்தரவும் வரவில்லை. திடீரென, யாரிடம் இருந்து இந்த தொகை பெறப்பட்டது என்ற கேள்வி எழுப்பினால், உரிய விளக்கம் வழங்கும் வகையில் பான் கார்டு பெற்றுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story