ஆம்புலன்சுக்கு வழி விடாத டெம்போவுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்


ஆம்புலன்சுக்கு வழி விடாத டெம்போவுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வில்லுக்குறி அருகே விபத்தில் சிக்கியவர்களை ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு வழிவிடாத டெம்போவுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதற்கிடைேய ஆம்புலன்சுக்கு டெம்போ வழி விடாத வீடிேயா சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி

குளச்சல்:

வில்லுக்குறி அருகே விபத்தில் சிக்கியவர்களை ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு வழிவிடாத டெம்போவுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதற்கிடைேய ஆம்புலன்சுக்கு டெம்போ வழி விடாத வீடிேயா சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இதில் அவற்றில் பயணம் செய்த இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ஆம்புலன்ஸ் வில்லுக்குறியை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. தோட்டியோடு பகுதியில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு டெம்போ டிரைவர் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் வாகனத்தை ஓட்டி சென்று கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் முன்னேறி செல்ல பலமுறை முயன்றும் வழிவிடாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் டெம்போ டிரைவர் போக்கு காட்டியபடி சென்றார்.

ரூ.11 ஆயிரம் அபராதம்

இதை ஆம்புலன்சில் இருந்த ஊழியர் வீடியோவாக பதிவு செய்து குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து டெம்ேபா டிரைவர் அய்யப்பன் மீது இன்ஸ்பெக்டர் வில்லியம் வழக்கு பதிவு செய்து ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விடாமல் போக்கு காட்டும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்சுக்கு டெம்போ டிரைவர் வழி விடாமல் போக்கு காட்டிய வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story