பறவைகளை வேட்டையாடியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
வேதாரண்யம் அருகே பறவைகளை வேட்டையாடியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனவர் ராமதாஸ் வனக்காப்பாளர் ரனீஷ்குமார், சதீஷ்குமார், வேட்டை தடுப்பு காவலர் பாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர் வண்டுவாஞ்சேரி பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.அப்போது பெருந்திடல் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கண்ணி வைத்து பறவைகளை வேட்டையாடிய வண்டுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 42). என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.பின்னர் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிவக்குமாருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர், சிவக்குமாரிடம் இருந்து பறவைகளை மீட்டு கோடியக்கரை முனியப்பன் ஏரியில் பறக்கவிட்டனர்.
Related Tags :
Next Story