வனப்பகுதியில் வேட்டையாட முயன்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
வனப்பகுதியில் வேட்டையாட முயன்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்
ஓமலூர்:
காடையாம்பட்டியை அடுத்த எரிமலை காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வலை விரித்து இருப்பதாக சேர்வராயன் வடக்கு வன சரக அலுவலர் பரசுராமமூர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது. அவர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். எரிமலை காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வலைவிரித்து வேட்டையாட முயன்ற செத்தபாளையத்தை சேர்ந்த மாது என்பவரை வனத்துறையினர் பிடித்தனர். அவரிடம் இருந்து வலை பறிமுதல் செய்யப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story