போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் ஒரே நாளில் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல்


போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் ஒரே நாளில் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல்
x

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் ஒரே நாளில் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் ஒரே நாளில் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. உரிய ஆவணம் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரி காளியப்பன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் நாட்டறம்பள்ளி பகுதி மற்றும் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை செல்லும் சாலையில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணிவரை வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அதிக பாரம் ஏற்றிவந்த 8 வாகனங்கள் மற்றும் விதிமுறை மீறிய 2 ஆம்னி பஸ்சுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு விதிகளைமீறி இயங்கிய 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.ஒரே நாளில் வாகன சோதனையில் போக்குவரத்து விதிமுறைகள் மீறியதாகவும் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தை இயக்கியதாகவும் அதிக பாரங்கள் ஏற்றிச் சென்றதாகவும் வாகன உரிமையாளர்களிடம் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story