கெடிகாரக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
கெடிகாரக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்:
தக்கலை அருகே குமாரகோவில் பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவர் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு கெடிகாரம் விற்பனை செய்யும் கடைக்கு சென்றார். அங்கு ரூ.10,495-க்கு ஒரு கெடிகாரம் வாங்கினார். ஆனால், அந்த கெடிகாரம்வாங்கிய சில நாட்களிலேயே பழுதானது. அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட கடையில் கொடுத்துள்ளார். அப்போது கடைக்காரர் மேலும் ரூ.1,920 முருகதாசிடம் பெற்றுக்கொண்டு ரூ.12,415-க்கு ஒரு புதியகெடிகாரத்தை வழங்கி உள்ளார். புதிதாக மாற்றப்பட்டகெடிகாரமும் 3 மாதத்தில் பழுதானது. இதுதொடர்பாக கடைக்காரரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்தார். இதனால், மனவேதனையடைந்த முருகதாஸ் குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர்கெடிகாரக்கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவருக்கு ெகடிகாரத்தை சரிசெய்து புதிய வாரண்டியுடன் வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்டஈடாக ரூ.5 ஆயிரமும், வழக்கு செலவு ரூ.2,500 ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.