சேவை குறைபாடு: விமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்;நுகா்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு


சேவை குறைபாடு: விமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்;நுகா்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
x

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு மத்திய அரசின் விமான நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு கூறி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு மத்திய அரசின் விமான நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு கூறி உள்ளது.

விமானம் தாமதம்

குமரி மாவட்டம் கூம்புவிளையை சேர்ந்த ஸ்டீபன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி, லண்டன், சிகாகோ வழியாக அட்லாண்டா செல்வதற்கு திருவனந்தபுரத்திலுள்ள மத்திய அரசின் விமான நிறுவனத்தில் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 820 ரொக்கம் செலுத்தி விமான டிக்கெட் புக் செய்திருந்தார்.

குறிப்பிட்ட நாள் அன்று திருவனந்தபுரத்திலிருந்து இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு டெல்லிக்கு 10.35-க்கு சென்றடைய வேண்டிய விமானம் தாமதமாகப் புறப்பட்டு மறுநாள் காலை 1.05 க்கு டெல்லி சென்றடைந்துள்ளது.

இதனால் நேரமின்மை காரணமாக டெல்லியிலிருந்து லண்டன் செல்லும் விமானத்திலும், அதைத்தொடர்ந்து சிகாகோ வழியாக அட்லாண்டாவிற்கும் பயணம் செய்ய இயலாமல் போய்விட்டது. இவ்வாறு தாமதமாக விமானம் புறப்பட்டதாக சான்றிதழையும் விமான நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் கட்டணம் செலுத்தி புதிதாக பயணச் சீட்டு பெற்று வேறு ஒரு விமானம் மூலம் அட்லாண்டா சென்றடைந்துள்ளனர்.

ரூ.1 லட்சம் நஷ்டஈடு

பின்பு விமான நிறுவனத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமானக் கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். விமான நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த ஸ்டீபன் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளா. அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விமான நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பயணம் செய்யாத விமானக் கட்டணமான ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 500, நஷ்ட ஈடு ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் ஆகமொத்தம் ரூபாய் 3 லட்சத்து 34 ஆயிரதது 500-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story