கோழி கழிவு ஏற்றி வந்த டெம்போவுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
கோழி கழிவு ஏற்றி வந்த டெம்போவுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
கன்னியாகுமரி
அருமனை:
கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு டெம்போ அருமனைக்கு வந்தது. டெம்போவில் இருந்து துர்நாற்றம் வீசியதும் பொதுமக்கள், போலீசாருக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து டெம்போவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கேரளாவில் இருந்து அருமனை அருகே உள்ள பன்றிபண்ணைக்கு கோழி கழிவுகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து டெம்போவுக்கு பேரூராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் போலீசார் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை வசூலித்து கொண்டு டெம்பாவை திருப்பி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story