இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு                  ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாலிசி தொகையை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சுசீந்திரத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் மூலம் குடும்பத்தில் யார் சிகிச்சை பெற்றாலும் இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் வழங்க வேண்டும். இந்த நிலையில் முத்துகிருஷ்ணனின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்காக பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததின் அடிப்படையில் சிகிச்சைக்கான பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை மட்டும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. மீதி பணத்தையும் தருமாறு கேட்டதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன் உடனடியாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துகிருஷ்ணன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணனுக்கு சிகிச்சைக்காக ஏற்கனவே செலவழித்த பணத்தில் மீதித் தொகையான ரூ.20 ஆயிரம், அபராதம் ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.27,500-ஐ ஒரு மாத காலத்திற்குள் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story