குமரியில் அதிகபாரம் ஏற்றி சென்ற லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
குமரியில் அதிகபாரம் ஏற்றி சென்ற லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் எடை கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி, தோவாளை, திருப்பதிசாரம், வெள்ளமடம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கனிம வளங்களை ஏற்றி வந்த இரண்டு டாரஸ் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் அதிகபாரம் ஏற்றி வந்த ஒரு டாரஸ் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த டாரஸ் லாரியின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----