7 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு விற்பனை செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்
செங்கம் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சி விற்றவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி பள்ளம்தோண்டி அழிக்கப்பட்டது.
செங்கம்
செங்கம் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சி விற்றவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி பள்ளம்தோண்டி அழிக்கப்பட்டது.
காட்டுப்பன்றி
செங்கம் அருகே உள்ள பிஞ்சூர் காப்புகாடு பகுதியில் காட்டுப்பன்றி, மான், முயல், மயில் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. இந்த விலங்குகள் தண்ணீர் தேடி அவ்வப்போது விலங்குகள் அருகில் உள்ள விவசாய கிணறு உள்ள பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
இந்த லையில் பனைஓலைபாடி பகுதியைச் சேர்ந்த மணி (வயது 35) என்ற நபர் பிஞ்சூர் காப்புக்காட்டு பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை கூறுகட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
7 கிலோ இறைச்சி
இதனை தொடர்ந்து செங்கம் வனத்துறை அலுவலர் ராமநாதன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் காட்டுப்பன்றி இறைச்சி விற்ற மணியை பிடித்தனர். அவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.அவரிடமிருந்து 7 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதனை பள்ளம் தோண்டி கொட்டி அழித்தனர். செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காடுகளில் வனவிலங்குகளை சமூக விரோதிகள் வேட்டையாடி வருவதாகவும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகளை வேட்டையாடாத வகையில் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.