இறைச்சி கடையில் தீ விபத்து


இறைச்சி கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இறைச்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4-வது தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி செல்லம்மாள் (வயது 50). இவர் எட்டயபுரம் ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர் அருகில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவு கடை முன்பு கோவில்பட்டி அருகே உள்ள கம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கனகராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சினிமாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவில் இறைச்சி கடையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்தனர். ஆனால் அதற்குள் கடை முற்றிலும் எரிந்து சாம்பலானதுடன், கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளும் தீயில் கருகி எலும்புக்கூடானது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story