குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ


குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் பீச்ரோடு வலம்புரிவிளையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. மாநகராட்சியில் 11 இடங்களில் குப்பைகளை உரமாக்கும் கூடம் செயல்பட்டு வருவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தற்போது குப்பைகள் கொட்டப்படுவது இல்லை. குப்பைகள் அனைத்தும் உரக்கூடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனினும் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. அந்த குப்பை குவியலில் அவ்வப்போது தீ பிடித்து எரிவதும், பின்னர் அதை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று காலையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கப்பட்டது. வழக்கமாக குப்பை கிடங்கில் தீ பிடித்தால் குறைந்தது 3 நாட்களாவது எரியும். ஆனால் நேற்று 3½ மணி நேரத்தில் தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்து விட்டனர். அங்குள்ள குப்பைகளில் பெரும் பகுதி ஏற்கனவே தீயில் எரிந்துள்ளதாலும், தற்போது அங்கு குப்பைகள் கொட்டப்படுவது இல்லை என்பதாலும் தீயை உடனடியாக அணைக்க முடிந்தது என்று தீயணைப்பு வீரர்கள் கூறினர்.


Next Story