தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
திருவோணம் அருகே தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர்
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் தேங்காய் நார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. சம்பவத்தன்று இந்த தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்து பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில், காற்று அதிகமாக வீசியதால், மின்கம்பிகள் உரசி ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை எரிந்து ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்து விட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story