மளிகை கடை குடோனில் தீ விபத்து


மளிகை கடை குடோனில் தீ விபத்து
x

மளிகை கடை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் வேன் எரிந்து நாசமானது

மயிலாடுதுறை

திருக்கடையூர்

செம்பனார்கோவில் அருகே உள்ள முடிதிருச்சம்பள்ளி கிராமம் கீழ முதலியார் தெருவை சேர்ந்தவர் கோபிநாதன் (வயது 35). இவர் அதே பகுதியில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு இவரது கடையையொட்டி பொருட்கள் வைக்கும் குடோனின் வெளிப்புறம் உள்ள தகர கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த காழியப்பநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் குடோனின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து செம்பனார்கோவில் போலீசார்‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story