பூட்டியிருந்த லாரி செட்டில் தீ விபத்து
ஆரணி அருகே பூட்டியிருந்த லாரி செட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி.நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் லாரி செட் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் பூட்டியிருந்த லாரி செட்டில் தீப்பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள் ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது எரிந்து கொண்டிருந்த லாரியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story