தும்பு ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்ததால் பரபரப்பு
ராதாபுரம் அருகே தும்பு ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே பரமேஸ்வரபுரம் கக்கன் நகரில் உள்ள தேங்காய் தும்பு நிறுவனத்துக்கு தென்காசியில் இருந்து ஒரு லாரி தும்பு ஏற்றிக் கொண்டு நேற்று காலை வந்தது. அந்த நிறுவனம் அருகில் வந்தபோது, திடீரென லாரியில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி தும்பு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், லாரி மற்றும் தும்பு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story