தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து
ராணிப்பேட்டையில் தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டையில் தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வக்கியில் தீ விபத்து
ராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே எம்.பி.டி.சாலையில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக வங்கியின் மாடியில் இருந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. அப்போது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வங்கி ஊழியர்களும், வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும் உடனடியாக வங்கியை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
பின்னர் இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் மகபூப் பேக் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பரபரப்பு
இதனை அடுத்து ராணிப்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வங்கியின் மேல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தால் வங்கி பணி நேரம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.