இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை


இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை
x

இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டம் ஆத்தூரில் இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கரூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு நேற்று தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ள பகுதிகளில் திடீரென தீப்பிடித்தால் அவற்றை எவ்வாறு அணைக்க வேண்டும். எண்ணெய்யில் தீப்பிடிக்கும் போது எந்த மாதிரியான தீயணைப்பு கருவியை பயன்படுத்த வேண்டும். தண்ணீரில் எது அதை கலந்து தெளிக்க வேண்டும். எண்ணெய்களை விபத்தில் இருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஒத்திகை செய்து காண்பித்தனர். இதில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story