குடோனில் தீ விபத்து; ரூ.5 லட்சம் பள்ளி உபகரண பொருட்கள் எரிந்து நாசம்
மயிலாடுதுறையில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பள்ளி உபகரண பொருட்கள் எரிந்து ட்நாசமானது.
மயிலாடுதுறையில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பள்ளி உபகரண பொருட்கள் எரிந்து ட்நாசமானது.
குடோனில் தீ பிடித்தது
மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்திற்கும் புதிய பஸ் நிலையத்திற்கும் பிரதான பாதையாக வண்டிக்காரத்தெரு உள்ளது. இந்த வண்டிக்காரத் தெருவில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல மாற்றுப்பாதை ஒன்று உள்ளது அந்த சந்துப் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடை அருகில் சாலை ஓரத்தில் அதிக அளவில் மலை போன்று குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
இந்தநிலையில் நேற்று மாலை டாஸ்மாக் கடை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென்று தீ பிடித்துள்ளது, இந்த தீ அருகில் பேமாராம் என்பவருக்கு சொந்தமான பள்ளி உபகரண பொருட்கள் குடோனில் பிடித்து தீ மள மளவென பரவி எரிய தொடங்கியதாக கூறப்படுகிறது.
ரூ.5 லட்சம் மதிப்பிலான...
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். வண்டிக்காரத்தெருவில் தீயணைப்பு வண்டி உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வாகனம் குடோனுக்கு செல்வதற்குள் அங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
ஆனாலும் போராடி மேலும் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீரர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகள் தீ பற்றாமல் பாதுகாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்றி குப்பைகள் கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது