கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
ஒடுகத்தூர் அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
வேலூர்
ஒடுகத்தூரை அடுத்த ஓங்கப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்தவர் தருமலிங்கம். இவர் சென்ட் பரப்பளவில் கரும்பு மற்றும் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இவரது நிலத்திற்கு மேல் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று காலை தென்னை ஓலை ஒன்று உயர் அழுத்த மின் கம்பிகள்மீது விழுந்ததில் மின்கம்பி அறுந்து கரும்புத் தோட்டத்தில் விழுந்து தீ பிடித்துள்ளது.
இதில் கரும்பு தோட்டம் தீபிடித்து எரிந்தது. இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணப்பு நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 50 சென்ட் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் முற்றிலும் எரிந்து கருகி நாசமாயின.
Related Tags :
Next Story